கார் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு…

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் நிலவி வருவதால் பங்குச்சந்தை பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் வாகனங்கள் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் தயாரிப்பதில் அதிக செலவு ஆகும் என்பதால் வருகின்ற ஏப்ரல் 1- முதல் வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயர்த்துவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

வாகனங்களின் மூலப் பொருட்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடர்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயர்வை ஏற்றுவது அவசியமானது என கூறியுள்ளது.

இதனிடையே செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 4 சதவீதம் உயர்த்துவதாகவும் மூலப்பொருட்களின் விலை சற்று குறைந்தால் மட்டுமே இந்த விலையினை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment