Connect with us

கையாலே தொடமுடியாத உணவு..! விற்பனைக்கு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி..

800px Chicken Lollipop

Tamil Nadu

கையாலே தொடமுடியாத உணவு..! விற்பனைக்கு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி..

கையாலே தொடமுடியாத உணவு..! விற்பனைக்கு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி..

தேனி மாவட்டம் போடியில் உணவு கடைகள், பழக்கடைகள், சாலையோர மீன் கடைகள் போன்றவற்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

போடியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் பழக்கடை ஒன்றில் காலாவதியான ஜுஸ் பாட்டில்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பலச்சாறு எஸன்ஸ் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. அதனை கீழே கொட்டிய அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அதே போன்று தரமற்ற உணவுகளையும் தடை செய்யப்பட்ட வண்ணப்பொடிகளை கலந்து வந்த உணவு விடுதிகளுக்கும் அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் 5 கடைகளில் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இது போல் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top