பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தான் வெளியேற்றப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஷிவானி கமல்ஹாசனிடம் கூறியுள்ளார்
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று ஷிவானி வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்
ரம்யா கேபி மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஷிவானிக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் வெளியேறுவதாக கமல் அறிவித்தார்
இதனையடுத்து சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கண்ணீருடன் வெளியேறினார் ஷிவானி. 90 நாட்களுக்கும் மேலாக மிக்சர் சாப்பிடும் போட்டியாளர் என்று ஷிவானியை ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில் ஷிவானி கடைசி நேரத்தில் தனது முழு பலத்தையும் ரோப் டாஸ்க்கில் காண்பித்து சிங்க பெண்ணாக வெளியேறுகிறார் என்று தற்போது அதே நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்
சக போட்டியாளர்களும் கடைசி நேரத்தில் வேற லெவலாக விளையாடி சிங்கப்பெண்ணாய் வெளியே போகிறார் என்றும் ஷிவானியை பாராட்டி கண்ணீருடன் விடை கொடுத்து அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷிவானியின் வெளியேற்றம் பாலாஜியை ரொம்பவே பாதித்துள்ளது என்பது அவரது பேச்சில் இருந்து தெரியவருகிறது