பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் தினமும் நான்கு மணிக்கு தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிடுவார் என்பதும் இந்த புகைப்படத்திற்காக அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் காத்திருப்பார்கள் என்பதும் தெரிந்ததே
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டபோது கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவர் பாலாவுக்கு ஆதரவாகவும் அதிகம் பேசாமல் இருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது
இருப்பினும் கடைசி நேரத்தில் ரோப் டாஸ்க்கை அவர் மிகவும் சிறப்பாக செய்து அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றதோடு சிங்கப்பெண் என்ற பெயருடன் அந்த வாரம் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி படங்களை பதிவு செய்து வந்த சிங்கப்பெண் ஷிவானி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் முறையாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படம் மிகவும் டீசன்டாக உள்ளது கவர்ச்சியை அவர் சுத்தமாக கைவிட்டு நாகரீகமான உடையில் அவர் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் திருந்தி விட்டார் என்றும் இதே போன்று அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் வழி நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னர் அவர் பதிவு செய்து இருந்த பல கவர்ச்சி புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது