பாலாவை கண்டுகொள்ளாமல் செல்லும் ஷிவானி: அம்மாவின் அடி பலமோ?

dcea5fe8a01073eadc94994da554201c

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் கிட்டத்தட்ட பிக்பாஸ் வீடு நிரம்பி உள்ளது என்பதும் தெரிந்ததே 

இன்று சுரேஷ் மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் வருகை தர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழையும் காட்சிகள் உள்ளன. ஷிவானியை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாகி அவரை வரவேற்று கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைகின்றனர்

இந்த நிலையில் அமைதியாக படுத்திருந்த பாலா, ஷிவானி வருகை குறித்த சத்தம் கேட்டதும் மிகுந்த ஆர்வத்துடன் அவரை பார்க்க வருகிறார். ஆனால் வரிசையாக ஒவ்வொருவராக கட்டிப்பிடித்துக் கொண்டு வந்த ஷிவானி, பாலாவை கண்டுகொள்ளாமல் நேராக அர்ச்சனாவை சென்று கட்டிப் பிடித்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ef2c9ed1e2e1b74be6db59bde627d623

அதன் பின்னர் பாலா சோகமாக திரும்பி செல்லும் காட்சிகள் உள்ளன. ஷிவானி பாலாஜியை ஏன் ஒதுக்கினார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏற்கனவே பாலா குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ஷிவானி அம்மா, அவர் வீட்டிற்கு வந்ததும் மேலும் அவரை திட்டி இருப்பார் என்றும் அதன் காரணமாகத்தான் அவர் பாலாஜியிடம் முகம் கொடுக்காமல் உள்ளார் என்றும் கூறப்படுகிறது 

ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்து வீடியோக்கள் மற்றும் இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே உண்மையிலேயே பாலாவை ஷிவானி ஓதுகிறாரா? அல்லது எடிட்டரின் கைவண்ணமா? என்பது தெரியவரும்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.