தமிழ் சினிமா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திறமைசாலி . சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்
மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்த ஷிவாங்கியை ரசிகர் ஒருவர் திட்டி தீர்த்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஷிவாங்கி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற சிவகார்த்திகேயன், ஷிவாங்கியை மிகவும் பிடிக்கும் என அவர் குரலில் மிமிக்ரி செய்தார்.

இவருக்கு டான் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஷிவாங்கியின் முதல் படம்.என்னதான் ஷிவாங்கிக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும் அவரை வெறுக்கும் கூட்டமும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது. டான் படத்தின் ட்ரைலர் வெளியான போதே அதில் ஷிவாங்கி கொடுத்த ஒரு ரியாக்ஷனை வைத்து அவரை பலரும் கேலி செய்து இருந்தனர்.
நேற்று வெளியான டான் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் விமர்சனம் கூறி இருந்தார். அவரிடம் ஷிவாங்கி குறித்து கேட்கப்பட்டு இருந்தது. ஷிவாங்கி பெயரை சொன்னதும் கடுப்பான அந்த ரசிகர் ‘ஷிவாங்கி லூசு, கொரங்கு அந்த பொண்ண அடுத்த தடவ படத்துல பாத்தா ஸ்க்ரீன கிழிச்சிடுவேன். அசிங்க அசிங்கமா கேட்ருவேன்.
தளபதி 66-வுடன் இத்தனை படங்கள் போட்டியா ?…மறுபடியும் விஜய்க்கு வந்த சோதனை!!..
#Sivangi Korangu, Paithiyam – Fan After Watching #Don Movie pic.twitter.com/L2P09dcO2R
— chettyrajubhai (@chettyrajubhai) May 13, 2022
அந்த பொண்ணு பாடுறது புடிக்கும் ஆனா நடிக்க வேண்டாம் என்று கண்ட மேனிக்கு பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது படு வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட ஷிவாங்கியின் ரசிகர்கள் பலர் அந்த ரசிகர் மீது காண்டாகி இருக்கின்றனர்.