பிரபல இயக்குநர் படத்தில் அறிமுகமாகும் சிவாஜி கணேசன் பேரன்!!!

0d2747fd06f6d9518a610968e2e6b0db

சிவாஜி கணேசனின் பேரன் தற்போது முன்னணி இயக்குநரின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் என்னற்ற ரசிகர்களை கவர்ந்து, உலகம் முழுவதிலும் பிரபலமானவர் நடிகர் சிவாஜி கணேசன். இவரது குடும்பத்தில் இருந்து பிரபு, ராம் குமார், விக்ரம் பிரபு, சிவாஜி தேவ் என பலர் திரைத்துறையில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகனான தர்ஷன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.