ஒரே நேரத்தில் ஆஸ்கர் பரிந்துரைக்காகவும், தேசிய விருதுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாஜி படங்கள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏவிஎம் ஸ்டுடியோவில் மூன்றாவது தளத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது பத்திரிக்கை நண்பர் ஒருவர் மூலம் 1968ஆம் ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான விருது தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு கிடைத்துள்ளது என்ற தகவல் சிவாஜியை அடைந்தது. இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்துள்ளது என்ற செய்தி சிவாஜியை மகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்த மகிழ்ச்சியான தகவலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தபோது சிவாஜி இருக்கும் இடத்திற்கு இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தபோது தான் தெய்வமகன் திரைப்படமும் ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது சிவாஜிக்கு ஞாபகம் வந்தது. மேலும் இந்த தகவலை சிவாஜிக்கு கூறியதும் இயக்குனர் திருலோகசந்தர் தான்.

தில்லானா மோகனாம்பாள் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதுக்காகவும், தெய்வமகன் திரைப்படம் ஆஸ்கார் விருது போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பெருமை எல்லாம் யாருக்கு.. தமிழ் கலைஞர்கள் அனைவருக்கும் சொந்தமானது என சிவாஜி கூறினார். தில்லானா மோகனாம்பாள் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சிக்கல் சண்முக சுந்தரத்தையும், தில்லானா புகழ் மோகனாம்பாளையும், கொத்தமங்கலம் சுப்புவையும் யாராலும் மறக்க முடியுமா.. இந்த கதாபாத்திரங்கள் இல்லாமல் அந்தப் படம் எப்படி வெற்றி பெற்றிருக்கும் என பெருந்தன்மையுடன் சிவாஜி கூறியிருந்தார்.

தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையாக வந்து முடிந்ததும் இதை படமாக்க விரும்பினார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். தன் விருப்பத்தை முதலில் சுப்புவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இந்த கதையின் உரிமை ஜெமினி வாசன் இடம் இருப்பதாக கூறியிருந்தார். ஜெமினியின் சார்பாக வாசன் இந்த படத்தை எடுக்கலாம் என நினைத்து ஏ.பி.நாகராஜன் இந்த கதை பக்கம் முதலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். மாதங்கள் பல கடந்தது, ஆனால் படம் எடுக்கும் எந்த வேலையும் தென்படவில்லை.

இயக்குனர் ஏ.பி.நாகராஜனுக்கு மீண்டும் தில்லானா நாடகத்தின் நினைவு வர வாசன் அவர்களை நேரில் சந்தித்து இந்த தொடர் கதையை படமாக தான் எடுக்க முயல்வதாக கூறினார். அதற்கு வாசன் அவர்களும் நானும் படமாக எடுக்க ஆசைப்படுகிறேன் வேண்டுமானால் நாம் இருவரும் சேர்ந்து எடுக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு ஏ.பி.நாகராஜன் வேண்டாம் என மறுத்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் பிடிவாதம் பிடித்த கமல்! கோபத்தை வெளிக்காட்டிய சிவாஜி!

ஆனால் வாசன் அவர்களும் மோகனாம்பாள் நாடகத்தை படமாக்க முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் ஏ.பி.நாகராஜனுக்கு மூன்றாவது முறையாக மோகனாம்பாள் நாடகத்தை படமாக்க வேண்டும் என்ற நினைப்பு வர வாசன் அவர்களை மீண்டும் நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்பொழுது வாசன் அவர்கள் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை புரிந்து கொண்டு உரிமம் வழங்குவதாக கூறி சம்மதத்தை தெரிவித்துள்ளார். உரிமத்தை பெற்ற ஏ.பி.நாகராஜன் உடனே படப்பிடிப்பில் இறங்கினார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு விருது கிடைத்ததில் பெரும் பங்கு ஏ.பி.நாகராஜன் அவர்களை சாரும் என்று சிவாஜி பெருந்தன்மையாக கூறியிருந்தார். மேலும் சினிமா துறையில் சிறப்பாக பணியாற்ற இத்தகைய பரிசுகளும் பட்டங்களும் உதவுவதாகவும், ஒவ்வொரு முறையும் நான் பரிசு பெறும் போது நாம் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தான் நினைத்துக் கொள்வேன் என சிவாஜி கணேசன் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...