சினிமாவின் அடையாளம்…. பராசக்தி ஹீரோ…. சிவாஜி நினைவு தினம் இன்று….!!

சினிமாவை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு மதித்துப் போற்றியவர்தான் சிவாஜி கணேசன். பராசக்தி எனும் படம் வருவது வரையிலும் சினிமா என்பது இவ்வளவுதான் என்று எண்ணம் கொண்டிருந்தவர்களை பிரமிப்படைய செய்தது. கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் உருவான வசனங்கள் ரசிகர்களின் இதயங்களில் ஆழமாக இறங்கி புது ரத்தம் பாய்ச்சின. அவ்வளவு நீளமான வசனங்களை பேசி நடித்த ஒரு புதுமுக நடிகனை பார்த்து அதிசயிக்காதவர்களும் அதன் பின்பு அவரைப் பற்றி பேசாதவர்களும் இல்லை எனலாம். சொல்லப்போனால் அதுவரை குறைவாக இருந்த நடிப்புக்கான அளவுகோலை சிவாஜி எனும் மனிதன் வந்து அதிகமாகி விட்டு சென்றார்.

Shivaji Ganesan

தமிழ் திரையுலகம் சிவாஜி வருகைக்கு பின்னர் கர்ஜீத் எழுந்து ஓட தொடங்கியது. 1928 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி சின்னையா மன்றாயருக்கு பிறந்த வீ .சி.கணேசனுக்கு பெரியார் வாயிலாக அமைந்தது. பெரிய பெயர். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் அற்புதமாக நடித்த கணேசனை நேரில் பார்த்த வியந்த பெரியார் சிவாஜி கணேசன் என பெயரிட்டு புதிய கௌரவம் வழங்கினார். திரையுலகில் சிவாஜிக்கு இடையான ஒரு நடிப்பை இதுவரை எவருமே வழங்கவில்லை என்பதுதான் அவரது சரித்திர பக்கத்தின் அழிக்க முடியாத எழுத்தாகும்.

71391580

தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிப்பின் இமயம் சிவாஜி இல்லை என்றால் நடிப்பிற்கான இலக்கணமே இங்கு வாங்கப்படாமலேயே இருந்திருக்கலாம். அதோடு எத்தனையோ தலைவர்கள் ஏன் கடவுள்களின் உருவமே தெரியாமல் இருந்திருக்கலாம் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதி. சிக்கல் சண்முகம் சுந்தரம் போற்ற பிரபலங்களுக்கு உருவம் கொடுத்தார். அதோடு சிவன், விஷ்ணு, கர்ணன், திருநாவுகரசர் போன்ற அவதாரங்களுக்கே வடிவம் அளித்தார் சிவாஜி. 74 வயது வரை நடிப்பில் சுவாசித்து வந்த செவாலியர் சிவாஜி கணேசன் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்ட நாள் இன்று.

சிவாஜி

சிவாஜி நினைவு தினம் 

திரையுலகில் கலைத்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் சிவாஜி கணேசனின் 22 ஆவது நினைவு தினம் இன்று அவருக்கு புகழஞ்செழியை திரையுலகம் செலுத்தி வருகிறது. கருப்பு வெள்ளை காலம் தொடங்கி எத்தனையோ மாற்றங்களை கண்ட சிவாஜி கணேசன் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் திரையரங்குகளையும் வாழ வைத்து இன்றும் ஆட்சி செய்து வருகிறார். சிவாஜியின் கண்கள் நடித்தது, கன்னங்கள் நடித்தது, தலைமுடி கூட நடித்தது நாடி நரம்பில் நடிப்பு வெறி ஊறிப்போன ஒரே நடிகரான சிவாஜிகணேசன் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் வாசிக்க : பணிபுரியும் மகளிருக்காக….. 200 ரூபாய் வாடகையில் அரசு விடுதி…. இது எத்தனை பேருக்கு தெரியும்….?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...