உலகமெங்கும் பல ஆராய்ச்சிகள் பல கண்டுபிடிப்புகள் தினம் தோறும் வந்து கொண்டேதான் உள்ளது. தரை தொடங்கி இப்பொழுது விண்ணையே ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதுவரை 10 தலைவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர்களாக பொறுப்பேற்று இருந்தனர். இறுதியாக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் கடந்த மூன்று வருடங்களாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்தார். அவர் ஜனவரி 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை இஸ்ரோ என்றும் அழைப்பர். இந்த சூழ்நிலையில் பதினோராவது தலைவரை இஸ்ரோ நியமனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோம்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சோம்நாத் இஸ்ரோவின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் இவர் 2024 ஆம் ஆண்டு முடியும் வரை இஸ்ரோவின் தலைவராக நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.