
செய்திகள்
தமிழ்நாடு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல்-இன்று கொழும்பு வருகை!
உலகளவில் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையையும் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் செய்வதறியாது தெரியாமல் சிக்கி தவித்துக் கொண்டு வருகின்றனர். ஒரு சில மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மத்தியில் நம் இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் சார்பில் தனித்துவமாக இலங்கைக்கு உதவ முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் இலங்கைக்கு உதவ திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கைத் தலைநகரமான கொழும்புக்கு சென்றடைகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மே 18ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருள் கப்பல் இன்று கொழும்பு சென்றடைகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் முதல் கட்டமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனைத்தும் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டன.
