தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் மீண்டும் எச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தினை போனிகபூர் தயாரிக்க உள்ளார். வங்கியின் கொள்ளை சம்பவத்தினை மையமாக கொண்டுள்ள இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதே போல் ஜிப்ரான் இப்படத்தினை இசையமைத்துள்ளார். வருகின்ற பொங்கலில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தில் அனிருத் பாடிய ‘சில்லா சில்லா’ பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்த்து ரசிகள் மத்தியில் இருந்து வந்தது.
தற்போது “என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு மனசுல போராட துணிவு இருக்கு “ என்ற ‘சில்லா சில்லா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#ChillaChilla is finally here to rule your playlists like a BOSS! 🔥Song out now🤘🏻https://t.co/fw6a3FfG1u #Thunivu #ChillaChilla #NoGutsNoGlory#ThunivuPongal #Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @udhaystalin @bayviewprojoffl pic.twitter.com/2CoEbmMa9X
— Zee Music South (@zeemusicsouth) December 9, 2022