Entertainment
மக்கள் மனதினைக் கொள்ளை கொண்ட ஷெரீன்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.
அம்மா போயிட்டு வர்றேன் டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது, அதில் பள்ளி மாணவர்கள்போல் அணிந்து கொண்டு குழந்தைகள்போல் பாவித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த கிண்டர் கார்டன் டாஸ்க்கின் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது. மீண்டும் பள்ளிச் சீருடைகளை அணிந்தபடி அனைவரும் குழந்தைகள்போல பாவிக்கத் தொடங்கினர்.
கஸ்தூரியைத் தொடர்ந்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுத்தார் சேரன். அதன்பின்னர் வாக்கியங்கள் ஒப்புவித்தல் நடைபெற்றது.
சேத்துகுள்ள சின்னபொண்ணு தத்தி தத்தி சிக்கிக்குச்சு என்று ஷெரீன் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. பார்வையாளர்கள் பலரும் இதற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
பிறகு லோஸ்லியா அவருக்கான வாக்கியத்தை சொல்கிறார். சாண்டி காமெடியாக நடந்துகொள்வதுபோல் கொஞ்சம் கடுப்பேற்றும்படியாக சொன்னார். அவரைத் தொடர்ந்து வனிதா பாடல் மறந்துவிட்டதாக குழந்தைபோல சொன்னார், இதுவும் பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.
ஷெரின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே சிறப்பாக இருப்பதால், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
