இன்று நடைபெற்று வரும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட ஐவரில் முதலில் சோம் சேகர் மற்றும் அடுத்ததாக ரம்யா ஆகியோர் வெளியேறியதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஷெரின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஒருவரை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார். இதற்கான டாஸ்க் வைக்கப்பட்ட போது அதில் ரியோ வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு ஷெரினுடன் வெளியேறுகிறார் ரியோ. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவரில் யார் வின்னர் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆரி, பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் வின்னர் மற்றும் மற்றொருவர் ரன்னர் என்ற நிலையில் யாருக்கு எந்த இடம் கிடைக்க போகிறது என்பதை இன்னும் சில நிமிடங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்