Connect with us

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் நலமாக இருந்தார்! பரபரப்பான வாக்குமூலம்;

ஜெயலலிதா

தமிழகம்

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் நலமாக இருந்தார்! பரபரப்பான வாக்குமூலம்;

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் நலமாக இருந்தார்! பரபரப்பான வாக்குமூலம்;

தமிழகத்தின் முதல்வராக இருந்து உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார் செல்வி ஜெயலலிதா. இவர் மக்களிடையே அம்மா என்று அழைக்கப்பட்டார். இவரது மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் இரண்டு நாட்கள் தீவிர விசாரணை நடைபெற்றது.

அவரிடம் 90க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் முதல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விசாரணை இன்றைய தினமும் நடைபெற்றுள்ளதாக காணபடுகிறது. அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்  வாக்குமூலம் அளித்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் விசாரணைக்காக ஆஜரானர்.

ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைகள் சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவர்கள் கூறினர் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது தேவையான கேட்கப்பட்டதாக மருத்துவர் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

ஆலோசனைக்கு பின் எக்மோ கருவி தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பால் ரமேஷ் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் நலமுடன் இருந்ததாகவும் அப்போது மருத்துவர்கள் கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top