Connect with us

5 நாட்கள் மட்டுமே அதிகமான வயதுவரம்பால் திருநங்கை கல்விக்கு அதிரடி காட்டிய ஆட்சியர்

திருநங்கை

தமிழகம்

5 நாட்கள் மட்டுமே அதிகமான வயதுவரம்பால் திருநங்கை கல்விக்கு அதிரடி காட்டிய ஆட்சியர்

5 நாட்கள் மட்டுமே கூடுதலாக வயதுவரம்பு இருந்ததால் கல்லூரி சேர முடியாமல் தவித்து வந்த திருநங்கைக்கு அத்தகைய சிக்கல்களை போக்கி கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மாணிக்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ஓவியா இவர் 2022 – 2023 கல்வி ஆண்டில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அவருக்கு கல்லூரி சேர்வதற்கான வயது வரம்பில் கூடுதலாக ஐந்தே நாட்கள் இருந்ததால் அவர் கல்லூரி சேர்க்கை இடம்பெற முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக திருநங்கை ஓவியா மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் அவர் கோரிக்கை அடங்கிய மனுவை உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்று கருணை அடிப்படையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பிஎஸ்சி (கணிதவியல்) படிப்பதற்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top