என்னுடைய ப்ளூடூத் ஸ்பீக்கர் அவங்கதான்… மனைவி பற்றி பேசிய KPY தீனா…

தீனா சின்னத்திரை விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தனது டைமிங் காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

அது தவிர விஜய் டிவியின் ‘சிரிப்புடா’, ‘ரெடி ஸ்டெடி போ’ போன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் ‘என்கிட்டே மோதாதே’, ‘பிபி ஜோடிகள்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லது விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சிக்காக திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் டைமிங் காமெடிக்கு ரசிகர்கள் இருப்பதால் பல விஜய் டிவி ரியாலிட்டி ஷோவிலும், பட விழாவிலும் இவர் போனில் பேசுவது போன்று அங்கிருப்பவர்களை கலாய்ப்பார். அது சிறப்பு விருந்தினர்களைக் கூட வாய் விட்டு சிரிக்க வைத்தது.

இதன் மூலம் வெள்ளித்திரையில் KPY தீனாவிற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி நடிகர் தனுஷ் நடித்த ‘பா பாண்டி’ திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு ‘தும்பா’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு ‘கைதி’, ‘மாஸ்டர்’ திரைப்படங்களிலும் தோன்றினார். இவர் விஜய் தொலைக்காட்சி விருதுகளில் ‘சிறந்த தனி நகைச்சுவை நடிகர்’ என்ற விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் KPY தீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிராபிக் டிசைனரான பிரகதி என்பவரை திருமணம் செய்தார். தற்போது படங்களில் பிஸியாக இருக்கும் KPY தீனா பேட்டிகளும் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் தனது மனைவி பற்றிய கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அதில் அவர் கூறியது என்னவென்றால் கடந்த ஒரு வருடமாக நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மனைவி பிரகதி தான். என் பக்கத்துல இருந்து எப்போவும் ஒரு பிளூடூத் ஸ்பீக்கர் மாதரி பாஸிட்டிவா பேசிட்டே இருப்பாங்க மோட்டிவேட் பண்ணிட்டே இருப்பாங்க என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews