இவர் இதில் விதிவிலக்கு தான்… காஜல் அகர்வால் புகழாரம்…

தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார் காஜல் அகர்வால்.

விளம்பர படங்களில் நடித்ததன் வாயிலாக திரையுலகில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் காஜல் அகர்வால். 2007 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த ‘பழனி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பெரிதாக கை கொடுக்காவிட்டாலும் 2010 ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 2012 ஆம் ஆண்டு சூர்யாவுடன் இணைந்து ‘மாற்றான்’, விஜயுடன் இணைந்து ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் நடித்தார். இவ்விரு படங்களும் வெற்றிப் படங்களாக காஜல் அகர்வாலுக்கு அமைந்தது.

தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ ஆகிய வெற்றித் திரைப்படங்களில் விஜய், தனுஷ், அஜித் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார் காஜல் அகர்வால். தற்போது கமலஹாசன் நடித்து வெளியாக இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

சமீபத்தில் நடந்த ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால் நயன்தாராவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், பொதுவாக ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால், அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காது. ஆனால் நயன்தாரா அதில் விதிவிலக்காக இருக்கிறார். அவர் மிகவும் திறமையானவர் மற்றும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் கதைகளும் தனித்துவமாக உள்ளது என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...