மதுபோதையில் மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை; தெறித்து ஓடிய மாணவிகள் – பரபரப்பு வீடியோ!

மதுரையில் மதுபோதையில் அரசு மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிகேட்ட மாணவியின் தந்தை தாக்கியதால் மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றபோது ஊர்தியின் முன்பாக இளைஞர்கள் சிலர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒலி எழுப்பியவாறு அதி வேகத்தில், ஆபாசமான வார்த்தைகளை கூச்சலிட்டபடி சென்றுள்ளனர்.

இதனை கண்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களின் செயலால் அச்சமடைந்தனர். இந்நிலையில் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டபோது கல்லூரி வாசல் முன்பாக நின்றுகொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை “காலேஜ் கிட்ட ஏன் இப்படி பண்றீங்க… மாணவிகள் பயப்படுறாங்க…” எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த இளைஞர்கள், மாணவியின் தந்தையை தாக்கியதோடு, கல்லூரி வளாகத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment