சினிமாவில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்த பிரபல நடிகர்!! ட்ரீட்டாக வெளியான போஸ்டர்;

நம் இந்திய சினிமாவில் புகழ்பெற்ற உச்ச நடிகர் என்று குறிப்பிட்டால் அதில் முதல் இடங்களில் வருபவர் நடிகர் ஷாருக்கான். ஏனென்றால் இவர் இந்தி திரையுலகில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் இவர் இந்தி மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படம் ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இன்றளவும் அந்தப் படம் அனைவராலும் வரவேற்கப்பட்டு காணப்படுகிறது. இந்த நிலையில் இத்தகைய கலைஞன் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளை இன்றைய தினத்தோடு நிறைவு செய்துள்ளார்.

இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தினத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பத்தான் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதிலும் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் இவர் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹைனா லே ஜஹான் கே என்ற திரைப்படம் மும்பை மறந்தா மந்திர் திரையரங்கில் 22 ஆண்டுகள் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

pathaan

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.