பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80,000ஐ தொட்ட சென்செக்ஸ்.. தாறுமாறாக எகிறிய பங்குகள்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்செக்ஸ் வெறும் 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளில் 50 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து 80,000 மைல்கல்லை தொட்டுள்ளது பங்குச்சந்தையின் அபாரமான வளர்ச்சியை காட்டுகிறது.

பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80 ஆயிரத்தை தொட்டுள்ள சென்செக்ஸ் மிக விரைவில் ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம் முக்கியமாக எச்.டி.எப்சி வங்கி பங்குகள் உயர்ந்தது தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்ததற்கு காரணம் என்று இந்த நிறுவனத்தின் பங்கு இன்று ஒரே நாளில் 3.5% உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. எச்டிஎப்சி மட்டுமின்றி ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி கோடாக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளின் பங்குகளும் உயர்ந்துள்ளதாகவும் இதனால் வங்கி பங்குகளுக்கான பேங்க் நிஃப்டி குறியீடும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக ஆட்சி ஏற்றவுடன் பங்குச்சந்தை மிதமான வேகத்தில் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரலாற்றில் முதல்முறையாக 80,000 ஐ தொட்டு காளையின் பிடியில் பங்குச்சந்தை மாறி உள்ள நிலையில் இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அபாரமான லாபம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் மிக அதிகமான லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.

பங்குச்சந்தை என்பது முதலீடு செய்து விட்டு பொறுமையாக காத்திருக்க வேண்டிய ஒரு அம்சம் என்றும் இன்று முதலீடு செய்து நாளை லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நீண்ட கால முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் நல்ல வருமானத்தை தரும் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பணம் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் 10 அல்லது 20 வருடம் கழித்து அந்த பணம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும் என்றும் எனவே பங்குச்சந்தையில் பொறுமை மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews