நீண்ட நாட்களுக்கு 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்த சென்செக்ஸ்… அதானியால் அதகளப்படும் பங்குச்சந்தை!

கடந்த சில மாதங்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60,000 மேலிருந்து நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று 60 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக அதானி பங்குகள் சரிவு காரணமாக ஒட்டுமொத்த பங்குச் சந்தையே அதகளப்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது என்பதும் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் சரிந்து 59,410 என்ற புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் 60,000க்கு கீழ் பங்குச்சந்தை சென்செக்ஸ் குறைந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவதற்கு முக்கிய காரணம் அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது தான் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருந்தால் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதானி நிறுவனங்களில் ஒரு சில பங்குகளின் விலை 20% வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதானி பங்குகளும் நாளை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த நிறுவனங்கள் மற்றும் அதானி நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளின் பங்குகளும் குறைந்துள்ளதால் ஒட்டுமொத்த பங்குச்சந்தையை தற்போது ஆட்டம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டர்பர்க் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரே ஒரு அறிக்கை காரணமாக இந்திய பங்குச் சந்தையை தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் இந்த தள்ளாட்டத்தை சரி செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.