சண்முகநாதனின் மறைவு தலையில் இடி விழுந்தது போல துயரத்தை அளித்துவிட்டது-டி.ஆர். பாலு;

ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பல உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் சண்முகநாதன். இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதவியாளராக இருந்தார்.

shanmuganathan

கருணாநிதி முதல்வராக இல்லாதபோதும் அவருக்கு உதவியாளராக பணியாற்ற அரசு வேலையை துறந்தவர். இந்த நிலையில் இன்று சண்முகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவருக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு டி.ஆர்.பாலு கண்ணீர் அஞ்சலி தெரிவித்துள்ளார். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனை மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.

கலைஞர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் சண்முகநாதன் என்றும் டி.ஆர்.பாலு கூறினார். சண்முகநாதன் மறைவு தலையில் இடி விழுந்தது போன்ற துயரத்தை அளித்து விட்டது என்று டி.ஆர்.பாலு கூறினார்.

தனது பிறந்த நாளன்று சண்முகநாதனுக்கு தான் அணிவித்த பட்டாடை தான் எனது இறுதி மரியாதை என்பது தெரியாமல் போனதாகவும் கூறினார். சண்முகநாதனை இழந்து வாடும் அவரது மனைவி, தம்பிகள் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்தார் டி.ஆர்.பாலு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment