ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் மாற்றம் ? என்ன காரணம் தெரியுமா!

கமல்ஹாசன் நடித்த “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியானது, இதில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா மடோன்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.அதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அதிரடி திரில்லர் படமான இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட மேலும் கொரானா காரணமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டது.இப்போது அது இந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

இந்தியன் 2 படத்தில் 1980 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த நவரச நாயகன் கார்த்திக் முக்கிய ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் பங்கேற்க காஜல் மும்பையில் இருந்து கிளம்பி இருக்கிறார்.

விருமன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமம் குறித்த தகவல் தெரியுமா ?

indian2 1 1596707504 1620644050 1

இந்நிலையில் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது,இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்பது இப்போது ஹாட் நியூஸ். ஒரு சிறிய ஷெட்யூல் நடைபெறும், இதில் பெரிய கலைஞர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment