பாலிவுட், கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தற்போது கார்த்திக் நடித்த விருமன் படத்தில் கமிட்டாகி இருந்தார். முற்றிலும் கிராமத்து கதையான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழாவானது இன்று மாலை மதுரையில் நடைப்பெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் கமிட்டாகி உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் நிலையில் தற்போது ஷங்கர் மகள் நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.