நடிகையாகிறார் ஷங்கர் மகள்: புதிய திரைப்பட பூஜை புகைப்படங்கள்

a7d8dea9f0ef98c2ab6dfb96fe9bc3cb

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் தற்போது அவருடைய இரண்டாவது மகள் நடிகையாக அறிமுகம் ஆக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

4b4dc6959835b2a302d08cb46c0aaa13-1இயக்குனர் ஷங்கரின் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நாயகனாக கார்த்தி நடிக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த பூஜையில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாலா, அதிதி சங்கர், ராஜசேகர பாண்டியன், நீரவ் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

b9f7bdbbde058858c2bd02074069b8c8இன்று நடைபெறும் பூஜைக்கு பின்னர் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அறிமுகமாக உள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.