Connect with us

டிராபிக் ராமசாமி கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்க நினைத்தேன்: ஷங்கர்

Entertainment

டிராபிக் ராமசாமி கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்க நினைத்தேன்: ஷங்கர்

8da505f0e7537b25437c5d82a9fe885d

பிரபல சமூக போராளியான டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கேரக்டரில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் கூறியதாவது:

a6e087dc01b5c7e5c2a36e9507e301e7டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.

எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top