Connect with us

ஷங்கர் – கே. ஜி.எஃப் ஹீரோ யாஷ் கூட்டணியில் 1000 கோடி பட்ஜெட் படம் தொடங்குமா?

sankar yaas

பொழுதுபோக்கு

ஷங்கர் – கே. ஜி.எஃப் ஹீரோ யாஷ் கூட்டணியில் 1000 கோடி பட்ஜெட் படம் தொடங்குமா?

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டங்களை படைப்பதில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் ஷங்கர், இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் வைத்து ஆர்.சி.15 படத்தையும் அதே நேரத்தில் இந்தியன் 2 பட ஷூட்டிங்கிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போழுது தென்னிந்திய சினிமாவில் வரலாற்று கதைகளை படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள். அந்த வகையில் சமீபத்தில் வந்த பாகுபலி படங்களின் வெற்றி வரவிருக்கும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

1600x960 1590267 save20220912205931

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள சரித்திர படம் குறித்த தகவல் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பரவி வைரலாகிவருகிறது. மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் சரித்திர கதையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், மேலும் இப்படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இயக்குனர் ஷங்கர், கே.ஜி.எஃப் நடிகர் யாஷை தான் தேர்வு செய்துள்ளார். இப்படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட பட்டதால், ஒரே தயாரிப்பாளரை வைத்து எடுக்க முடியாததால் சில முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த படத்தை எடுக்க திடடமிட்டுள்ளனர். அதில் பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது என கூறப்படுகிறது.

பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கும் அஜித்தின் துணிவே துணை! ரிலீஸ் எப்போ தெரியுமா?

தற்போது இந்த படம் குறித்து யாரிடமிருந்தும் அதிகாரப்பூர்வமான வார்த்தைகள் வராததால் ஷங்கர் தனது தற்போதைய கமிட்மென்ட்களை முடித்துவிட்டு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top