3 இயக்குநர்களை உதவிக்கு அழைத்த சங்கர் ! மாஸாக ரெடியாகும் இந்தியன் 2 படம் !

கமல்ஹாசன் நடித்த வெற்றி திரைப்படமான “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியாகி மாஸான வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பிப்ரவரி 2020 இல் தொடங்கப்பட்டு பல காரணகளளால் நிறுத்தப்பட்டது. அதன் பின் இந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

அதே போல் படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.

indian2 1 1596707504 1620644050 1

இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை சமீபத்தில் ‘இந்தியன்-2’ படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘அவர் திரும்ப வந்துவிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதே நேரத்தில் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின. சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருக்கும் பேட்டியில் இந்தியன் 2 படம் மூன்று மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

 

பொன்னியின் செல்வனின் படத்தின் புதிய BTS வீடியோ – மிஸ் பண்ணாதீங்க!

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது சிசியர்களாகிய இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இப்படத்தை இணைந்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.துணைக் கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் இயக்குவார்கள் எனவும் கமல் உள்ளிட்ட சில முக்கியமான முன்னணி கதாபாத்திரங்களை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment