பாலியல் தொழிலாளர்களுடன் உறவு: கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி பரபரப்பு புகார்

தனது கணவர் பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்திருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து பேச்சாளர் ஷமி, ஹாசிம் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கணவர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசிம் பல்வேறு புகார்களை அடுக்கடுக்காக கூறி வருகிறார். ஷமி வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் குடும்பத்தகராவில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஹாசிம் தற்போது தனது கணவர் பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்துள்ளார் என திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர், அந்த மனுவில் தனது கணவர் தனனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார் என்றும் பாலியல் தொழிலாளர்களிடம் கள்ள உறவு வைத்து இருக்கிறார் என்றும் இதற்காக ஒரு தனி மொபைல் போன் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளர்களுடன் உறவில் இருந்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட சக வீரர்களுடன் பயணம் செல்லும் போது கூட இந்த உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவு விசாரணை வரவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கொல்கத்தா நீதிமன்றத்தில் ஷமி மனைவி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் முகமது ஷமி அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த ஜீவனாம்சம் தொகையை தனக்கு திருப்தியாக இல்லை என்று நீதிமன்றத்தில் ஷமி மனைஇ தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.