News
எனது மனைவிக்கு முதல் திருமணம் நடந்ததே எனக்கு தெரியாது: அதிர்ச்சியில் ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்துவீச்சாளர் ஷமி மிது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் கடந்த வாரம் திடுக்கிடும் பல குற்றச்சாட்டுக்களை கூறியிருந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று ஹசினின் முன்னாள் கணவர் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டிக்கு பின்னர்தான் ஷமிக்கு தனது மனைவி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்
இதுகுறித்து ஷமி கூறுகையில், ‘ஹசின் ஜஹன் ஏற்கனவே திருமணம் நடந்தது, குழந்தைகள் இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. ஹசின் ஜஹனுக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளை அவரின் உறவினர்கள் என்றே அடையாளம் காட்டினார். எனக்கும், ஹசின் ஜஹனுக்கும் நடந்தது இரண்டாவது திருமணம் என்பது எனக்கு தெரியாது. எங்களுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் இரண்டு குழந்தைகள் பற்றி அவர் கூறிகையில் என்னுடைய தங்கையின் குழந்தைகள் என்றே கூறினார், அவருடையது கிடையாது என்று தெரிவித்து இருந்தார்,” இவ்வாறு முகமது ஷமி கூறியுள்ளார்.
