ஹிந்தி தெரியாதுனு அவமானப்படுத்துனாங்க.. நடிகர் சித்தார்த் ஆவேசம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரிகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாக இன்ஸ்டா பதிவில் வெளியிட்டு இருப்பது இணையவாசிகள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதில் தன்னுடைய வயதான பெற்றோர்களை மிகவும் துன்புறுத்தியதாகவும், கிட்டத்தட்ட 20 நிமிடங்களாக பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை நாணயங்களை அகற்றி சொல்லி வற்புறுத்தியதாக மிகுந்த வேதனையில் கூறியுள்ளார்.

sithu

அதே போல் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச சொல்லி கட்டாயப்படுத்தினாலும் அவர்கள் கேட்காமல் தொடர்ச்சியாக இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், இருப்பினும் தங்களுக்கு இந்தி தெரியாதுனு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

இந்தியாவை பொறுத்த வரையில் இப்படிதான் இருக்கும் எனவும் வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தது இணைய வாசிகள் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.