நஸ்ரியாவை தொடர்ந்து ரீ என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

கல்கியின் புகழ் பெற்ற ’பொன்னியின் செல்வன்’ என்கிற நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’,இந்த திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத் குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

pshome 1654675823 1

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் தஞ்சாவூரில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும், படத்தின் புரோமோசனுக்காக உலகின் பல பகுதிகளுக்கு படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது .இந்த டீசர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் கண்டிப்பாக கலந்துகொள்ள உள்ளார் அதைத்தொடர்ந்து அவரது மாமனார் அமிதாப் பச்சன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

இசையமைப்பாளரான ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளதால் இந்த படத்திற்கு டீசர் வெளியீட்டு விழா அவரும் கலந்துகொள்ளயுள்ளார்.500 கோடி பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்க்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரைத்துறையினரிடமும் ஆவலை அதிகரித்துள்ளது.

17

அஜித்தின் ஏகே 61… வியப்பூட்டும் கதைக்களம்! எச்.வினோத் வெளியிட்ட தகவல்!

இதற்கு இடையில் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது,முன்னணி நட்ஷத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் நடிகை ஷாலினி நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகை ஷாலினி அஜித் அவர்களை திருமணம் செய்து சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார்.தற்போழுது 21ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளாராம்,இந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment