ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் தேறுமா? டுவிட்டர் விமர்சனம்

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஷாருக்கான் தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. நான்கு வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

pathan

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்திருந்ததால் இந்து அமைப்புகள் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பை வெளிக்காட்டினர். ஆனாலும் இந்த படம் எதிர்ப்பை மீறி முன்பதிவில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் ‘பதான்’ திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

ஷாருக்கான் மீண்டும் பிரம்மாண்டமாக ரீஎண்ட்ரி ஆகியுள்ளார் என்றும் படம் முழுவதையும் அவர் தன் தோள் மீது சுமந்து உள்ளதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தீபிகா படுகோன் அழகாக மட்டுமின்றி அவரது கேரக்டர் மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அவர் பட்டையை கிளப்புகிறார் என்றும் நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் என்றும் கூறியுள்ளனர்.

pathan secondதீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் மீண்டும் தாங்கள் ஒரு சிறந்த நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார்கள் என்றும் ஷாருக்கான் சூப்பர் என்றும் ஸ்கிரீன் பிளே மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அபாரமாக இருப்பதாகவும் சல்மான் கானின் சிறப்பு தோற்றம் சூப்பர் என்றும் மொத்தத்தில் ‘பதான்’ திரைப்படம் ஒரு ஆக்சன் பிரியர்களுக்கான படம் என்றும் கூறியுள்ளனர்.

மொத்தத்தில் ஷாருக்கானின் படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் ஆக்சன் படம் என்று படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் படங்கள் பாலிவுட்டில் தோல்வி அடைந்துள்ள நிலையில் ஷாருக்கானின் படம் வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பாலிவுட் திரையுலகினர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.