படம் முடிந்துவிட்டது என எழுந்து வந்திடாதீர்கள்.. ‘பதான்’ பட இறுதியில் உள்ள சர்ப்ரைஸ்!

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்த படம் சாதனை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்து சில மாதங்களுக்கு முன்னால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 என்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் கோபம் அடையும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்தியாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நாட்டின் மீது எடுக்கும் தீவிரவாத நடவடிக்கை, அதை முறியடிக்க ‘பதான்’ செய்யும் நடவடிக்கையாக இரண்டுக்கும் இடையே தான் இந்த படத்தின் கதை செல்கிறது.

pathan

நான்கு ஆண்டுகளுக்கு முன் ’ஜீரோ’ என்ற படத்தில் நடித்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அந்த படம் சரியாக போகாததால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் படமே ரிலீஸ் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் ‘பதான்’ அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படத்தில் வலிமையான வில்லன் இருந்தால் மட்டுமே அந்த படம் ஆக்சன் படத்திற்குரிய அந்தஸ்தை பெரும், அந்த வகையில் ஜான் ஆபிரகாம் வில்லத்தனம் இந்த படத்திற்கு மிக பெரிய பிளஸ் .அதுவும் அவருடைய கொள்கையில் சிறிது நியாயமும் இருப்பதால் அவரை வில்லனாக மட்டும் கருத முடியாமல் ஹீரோவுக்கு சமமாகவும் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

pathan secondதீபிகா படுகோனே நாயகி மட்டுமின்றி ஆக்சன் காட்சியிலும் அசத்தி இருக்கிறார். ஷாருக்கானுக்கு இணையான ஆக்ஷன் காட்சி மற்றும் ஷாருக்கான் இடையிலான கெமிஸ்ட்ரி ஆகியவை மிக கச்சிதமாக பொருந்துகிறது.

இந்த படத்தின் இயக்குனர் மிகவும் புத்திசாலித்தனமாக சிறப்பு தோற்றத்தில் சல்மான் கானை இணைத்துள்ளார். அவருக்காகவே எழுதப்பட்ட மாஸ் சீன்கள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், சல்மான்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே ஆகிய நான்கு கேரக்டர் தான் படம் முழுவதும் வலம் வருகின்றன என்பதும் நாட்டுப்பற்று கதையை டிஜிட்டல் வடிவத்தில் மிகவும் சிறப்பாக கிராபிக்ஸ் காட்சிகளுடன் கொடுத்து உள்ளது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாம் குரூஸ் டைப் ஹாலிவுட் சண்டை காட்சிகளுக்கு இணையான ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக படம் முடிந்தவுடன் அவசரப்பட்டு யாரும் வெளியே வந்து விட வேண்டாம், ஷாருக்கான் மற்றும் சல்மான் கானின் வசனங்கள் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களுக்கு இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.