ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு!!

தனது  நடிப்பால் தனது திறமையால் தனது கடின முயற்சியால் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருகிறார் நடிகர் ஷாருக்கான். அவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.

ஆரியன் கான்இவ்வாறுதான் சம்பாதித்த பெயரை ஒரு இமை பொழுதில் நொறுக்கி விட்டார் அவரது மகனாகிய ஆரியன் கான். ஏனென்றால் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் போதைமருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரியன் கான் மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதை மருந்து கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக அவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆரியன் கான் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரியன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க மும்பை போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஜாமீன் கோரும் ஆரியன் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு தெரிவித்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

ஆரியன் கான் வெளியே வந்தால் ஏழைகளுக்கு உதவுவேன், நல்லது செய்வேன் என்று கூறியிருந்த நிலையிலும்கூட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment