கௌரவ வேடத்தில் விஜய் இல்லை..? ஷாருக்கானின் ஜவான் படக்குழு மறுப்பு..?

மெகாஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் உருவாகும் மாபெரும் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம் ஜவான். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது.படத்தின் ஷெட்யூல் தற்போழுது சென்னையின் நடைபெறுகிறது.

சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு ,நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான்-இந்தியா படமாக வெளியிடப்படும்.ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தீபிகா படுகோனே மற்றும் விஜய் சேதுபதி நேருக்கு நேர் நடக்கும் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.

JAVAAN 1

அஜித்தின் துணிவு படத்தின் கதை இதுதான்! வெளியான மாஸ் அப்டேட்!

அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.தளபதி விஜய் ஷாருக்கானின் அடுத்த படத்தில் ஒரு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் வீட்டில் 3 வது நாளே காப்பிக்கு சண்டையா? தெறிக்கவிடும் அனல் பறக்கும் புரோமோ!

சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒரு நாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது ஆனால் தற்போது சென்னை சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் விஜய் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது மேலும் இனிமேலும் அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவல் எந்த அளவிற்கு உறுதியானது என தெரிய வில்லை. அதிகார பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கவும்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment