இயக்குனர் அட்லி,ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியா மணி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகிய முன்னணி நட்ஷத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஷாருக் விஜேஎஸ்-ஐ வானளாவப் புகழ்ந்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிரத் தொடங்கியுள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்த திறமையான நடிகரின் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக இது அமைந்தது என கூறினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் பாராட்டுக்கு அப்போது விஜய் சேதுபதி எப்படி ரியாக்ட் செய்து என தெரியாமல் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் SRK இடையே ஒரு பெரிய மோதலாக இருக்கப்போகிறது, மேலும் அட்லியை இயக்கம் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஓடிடி ரிலீஸ் – எந்த நடிகரின் ஓடிடி தளத்தில் தெரியுமா?
#ShahRukhKhan about #VijaySethupathi 🌟🔥
Villain of #Jawan 💥pic.twitter.com/tiRn4T7j8d
— Laxmi Kanth (@iammoviebuff007) July 5, 2022