
பொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் களமிறங்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக கலக்கி தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் தான் நடிகை ஷபானா.இவருக்கு சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்தும் ஷபானா தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவுள்ளார். இவர் முதலில் விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்தார் அதன் பின்னர் அடுத்ததாக விஜயதசமி என்ற மலையாள தொடரில் நடித்து அசத்தினார்.
இதன் மூலம் பிரபலம் அடைந்த இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதுடன் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
உண்மையை கூறினால் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகள் அளவிற்கு ஷபானா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு இவர் நடித்துவரும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆரியணை திருமணம் செய்து கொண்ட இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் ஸ்ம்ருதி வெங்கடேஷ், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ள நிலையில் திரைப்படத்தில் நடிகை ஷபானா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
சிம்பு ,ஜெயம்ரவி ,விஷால் படங்கள் ஒரே நாளில் மோதல்! தேதி தெரியுமா?
அது குறித்த சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார். இவர் வெள்ளிதிரைக்கு என்ட்ரி கொடுத்திருப்பதால் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சின்னத்திரையை போல் வெள்ளிதிரையிலும் சாதிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
