விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பிரபலம் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
அதே போல் வில்லன் கதாப்பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிய இப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே போல் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் 7 படங்களில் நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தற்போது சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் அப்டேட் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதன் படி, படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.