மாணவிக்கு பாலியல் கொடுமை- கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர் மீது குண்டாஸ்!!

நம் தமிழ்நாட்டில் அதிக பாலியல் வன்கொடுமைகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம் சாய்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தந்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

எனவே கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அதிமுக பிரமுகராகவும் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது கல்லூரி முதல்வர் செந்தில்குமாருக்கு உறுதுணையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment