17-வயது சிறுமி பாலியல் சீண்டல்: பிரபல கிரிக்கெட் வீரர் கைது!!

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த சூழலில் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று பிறகு நாடு திரும்பிய அவர், விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கிரிக்கெட் வீரர் காத்மாண்டு செயலுக்கு நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீல் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தர பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment