பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் வழங்க வேண்டும்-உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொழில் செய்யும் பாலியல் தொழிலாளிகள் பலர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிய அடையாள அட்டை இல்லாமல் தடுமாறி வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு உரிய ரேஷன் உள்ளிட்ட சாதாரண பொருட்கள் கூட கிடைப்பதில்லை.

எங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்திற்கு சென்றதால் அவ்வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்ப்பாட்டு மையத்தால் பாலியல் தொழிலாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் அவர்களுக்கு ஆதார் , ரேஷன் கார்டு போன்றவை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

ஆதாரம் எதுவும் அவர்களிடம் கேட்க கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment