பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு: ஆவணங்கள் மாயம்!!

பெண் எஸ்பிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்கள் மாயமானதால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த  உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் பணியினை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை விவகாரமானது சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தி முடிவடைந்த நிலையில் இருவரது குற்ற பத்திரிகையானது விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது வழக்கில் ஆவணங்களான பெண் எஸ்.பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதோடு காணாமல் போன ஆவணங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.