பாலியல் சர்ச்சையில் சிக்கி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நித்தியானந்தா. இவரை கைது செய்ய இந்தியாவில் ஆணைகளிடம் போலீசாருக்கு அதிரடி உத்தரவு ஒன்று பாய்ந்தது.
அந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நித்தியானந்தா கைலாச என்ற நாட்டை வாங்கியதாகவும் அதை நாடாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அவ்வப்போது சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.
தலைமறைவாக இருக்கும் கைலாசா மேலும் ஒரு சர்ச்சையில் என்ட்ரி ஆகியுள்ளார். அந்த வகையில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது உண்மை என்றும் தனக்கு சிகிச்சை அளிக்க 27 மருத்துவர்கள் இருப்பாதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், தினந்தோறும் நித்திய பூஜை மட்டும் நிற்கவில்லை என்றும் நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன் அதோடு விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என கூறியதால் அவர்களுடைய பக்தர்கள் நிம்மதிஅடைந்துள்ளனர்.