பாலியல் புகார்: சென்னை ஐஐடியில் ஒருவர் அதிரடி கைது!!!

கடந்த சில நாட்களாகவே கல்வி நிறுவனங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை ஐஐடி நிர்வாகத்தை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக கடந்த ஜூலை 24-ம் தேதி ஐஐடி வளாகத்தில் கேரள மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் கொடுக்க முன்வராத நிலையையடுத்து இத்தகைய விவகாரம் குறித்து  ஐஐடி நிறுவனம் நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

அதன் படி, வளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஐஐடி நிறுவனத்தில் இருக்கும் கேன்டீனில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், கல்வி நிறுவனங்களில் இத்தகைய செயல் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment