ஆறுகளில் கழிவுநீர் கலப்பு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு! தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

471bd219ce020f0a579bc0670659d737

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப தமிழகத்தில் பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி நீரானது திருச்சி பெரம்பலூர் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் குடிநீர் வாழ்வாதாரமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வைகை ஆறானது கடலில் கலக்காத ஆறாக உள்ளது.இந்த வைகையானது தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் வாழும் மக்களின் குடிநீராக காணப்படுகிறது. மேலும் தாமிரபரணி திருநெல்வேலி தொடங்கி தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது.

f0384c765d8d815002193504ea1b9b24

இத்தகைய தமிழகத்தில் நீர் வளம் மிகுந்த காணப்பட்டாலும் இந்த  ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது குறித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. அதன்படி ஆறுகளில்  நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் பெற்று அறிக்கை தர தலைமை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கழிவுநீர் கால்வாயில் வெளியேற்றக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நறையூரில் ஓடும் பாசன கால்வாயில் குடியிருப்புவாசிகள் கழிவு நீரை வெளியேற்றுவது புகார் எழுந்துள்ளது. மேலும் தேவைப்பட்டால் ஆட்சியர் ஆய்வு செய்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட்டு அனுமதித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment