செவ்வாய் தோஷத்தினை நிவர்த்தியாக்கும் செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்..

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும். பூர்வீக பூமியை விற்கும் துர்பாக்கி நிலை ஏற்படும். தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவர். அதனால் செவ்வாய் தோசத்திலிருந்து விடுபட கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி செவ்வாயை வழிபட்டு பலன் பெறலாம். செவ்வாய் கிரகத்திற்கு அங்காரகன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

.

செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்

பொருள்: வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானே, வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே இந்த அடியேனுக்கு நல்லாசி வழங்க வேண்டி உங்களை வணங்குகிறேன்

தினமும் இந்த செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை அடையும், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் மட்டுமாவது ஜபிக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.