பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 7000 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல்?

இன்றைய தினம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதில் வேளாண்மை, மருத்துவத்துறை, சிற்பக்கலை உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டினை அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் படிப்பு சம்பந்தமான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன் ஒரு கட்டமாக மேற்படிப்பு படிக்கப் படிக்க மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும், அதற்கான நிதியிணையும் தமிழகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒதுக்கிவிட்டார்.

பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 7000 கோடியில் பள்ளி மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். இந்தாண்டு பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 1300 கோடி ஒதுக்கப்படும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment