இன்று எந்தெந்த பகுதிகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை?

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கும் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் வள்ளியூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print